கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே…
திரியேக தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்! உங்களுக்கு என்னுடைய உள்ளத்தின் ஆழத்திலிருந்து அன்பின் வாழ்த்துகள். நீங்கள் சுகமாக இருப்பீர்கள் என்று விசுவாசிக்கின்றேன். கர்த்தருடைய மகா பெரிய கிருபையினால் ஏழாம் வருடத்திலும் நடத்தப்படும் மெகா வேதாகமம் எழுதும் தேர்வுக்கான அறிவிப்பினை உங்களுக்கு தெரியப்படுத்துவதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன்.
பரலோக தேவனுடைய பிள்ளைகள் பரிசுத்த வேதவசனத்தை வாசித்து, எழுதி, தியானிக்க வேண்டும். மற்றும் அதை பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் 2019 ம் வருடத்திலிருந்து ஒவ்வொரு வருடமும் தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் சார்பாக வேதாகமம் எழுதும் தேர்வு நடத்தப்படுகின்றது. இதுவரை ஆறு வருடம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இது அநேகருக்கு ஆசீர்வாதமாகவும் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு பிரயோஜனமாகவும் உள்ளது. இந்த தேர்வுகளில் அநேகர் கலந்துக்கொண்டு தேவனுடைய பரிசுத்த வேதத்தினை சொந்தக் கையால் எழுதி, பரலோக தேவனுடைய ஆசீர்வாதத்தினை பெற்றுக்கொண்டார்கள். சத்திய வேதத்தினையும் அறிந்துக்கொண்டார்கள். ஊழியத்தின் மூலமாக கொடுக்கும் பரிசினையும் பெற்றுக்கொண்டார்கள்.
கடந்த வருடங்களைப்போல இந்த 2026-ம் வருடமும் வேதாகமம் எழுதும் தேர்வு நடத்தப்படுகின்றது. இதில் கொடுக்கப்பட்டுள்ள வேதப்பகுதியை விதிமுறைக்குட்பட்டு பிழையில்லாமல், எந்த ஒரு வசனத்தையும் விடாமல் தெளிவாக எழுதிய முதல் மூன்று பேருக்கு பரிசுகள் வழங்கப்படும். முதல் பரிசு :30,000 ரூபாய், இரண்டாம் பரிசு : 20,000 ரூபாய், மூன்றாம் பரிசு :10,000 ரூபாய் ஆகும். இன்னும் பல பரிசுகளும் உள்ளன. ஆறுதல் பரிசும் உண்டு. மேலும் கலந்துக்கொள்ளும் அனைவருக்கும் E-Certificate வழங்கப்படும்.
வீட்டிலிருந்தபடியே இந்த தேர்வில் பெரியவர்கள் சிறியவர்கள் என்ற வயது வரம்பின்றி யார் வேண்டுமென்றாலும், எத்தனை முறை வேண்டுமென்றாலும், ஒரே குடும்பத்தில் உள்ள எத்தனை நபர்கள் வேண்டுமென்றாலும் கலந்துக்கொண்டு எழுதலாம். இதற்காக எந்த விதமான கட்டணங்களும் கிடையாது. அனுமதி முற்றிலும் இலவசம். கொடுக்கப்பட்டுள்ள வேதப்பகுதியை பார்த்து Long Size Note –ல் பிழையில்லாமல், சொந்தக்கரத்தினால் தெளிவாக எழுத வேண்டும். எழுதிய நோட்டை கடைசி தேதிக்குள் எங்களுக்கு கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும். நீங்களும் இத்தேர்வில் கலந்துக் கொண்டு வேதவசனத்தை சொந்தக் கையினால் எழுதலாம்.
இந்த 2026-ம் வருடம் விதிமுறைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. எனவே, கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை மிகக் கவனமாக வாசித்த பின்பு எழுதவும். ஏனென்றால் விதிமுறைக்குட்பட்டு பிழையில்லாமல், எந்த வசனத்தையும் விடாமல் தெளிவாக எழுதியவர்களுக்கு மட்டுமே பரிசுகள் வழங்கப்படும்.
தேர்வினை எழுதுவதினால் கிடைக்கும் ஆசீர்வாதங்கள் மற்றும் தேர்வுக்கான விதிமுறைகள், பரிசுகளுக்கான முழு விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அதை கவனமாக வாசித்த பின்பு தேர்வினை எழுத தொடங்குங்கள்.
Beloved in Christ…
Glory to the Triune God! Greetings of love from the bottom of my heart. I believe that you will be doing well. By the great grace of the Lord, I am very happy to announce you of the Mega Bible Writing Examination, which will be held for the seventh year also.
From 2019 onwards, the Bible writing exam is conducted on behalf of Prophetic Words Ministries with the goal of encouraging God's children to read, write, and meditate, and become familiar with the Holy scriptures. we have completed six years of conducting this exam so far. It has been a blessing for many people and beneficial to their spiritual lives. Many participated in these examinations and wrote the Holy Scripture with their own hands and received the blessings of the heavenly God. They also learned about the Holy Bible and received the prizes from the ministry.
This year, like the previous years, the Bible writing exam -2026 will be held. Prizes will be awarded to the three people who write the given scriptures correctly, without errors, and without leaving out any Verses. First prize: Rs.30,000, Second Prize: Rs.20,000. Third prize: Rs.10,000. There are many other prizes as well. Consolation prizes will also be given. All participants will also receive an E- certificate.
Anyone can write as many times as they want from home and as many people in the same family can write without any age limit as young or old. There are no charges for this. Registration is absolutely free. Look at the given portion of scripture and write clearly in your own handwriting without any errors in Long size Note. The written note should be sent to us before the last date. In the name of the Lord Jesus Christ, I cordially invite you to participate in this examination and write the scriptures with your own hand.
This year 2026 some changes have been made in the rules. So, read the given terms very carefully and then write. Because the prizes will be awarded only to those who have written clearly without any errors and without leaving out any verse according to the rules.
The blessings that come from writing the exam, as well as the full details of the exam rules and prizes, are given below. Please read it carefully before starting to write the exam.